



1968இல் ஈழத்து மெல்லிசை உலகில் சாதனை படைத்த பரமேஸ் கோணேஸ் அவர்களின் தந்தை விபுலானந்த அடிகளாரின் முதன் மாணக்கன். அமரர்கள் கவியுர் விபுல பீதாம்பரன் - தாய் பொற்கொடி நாயகி அவர்கள்.
1966முதல் எனது உயிர் நண்பனாக ஒரே பாடசாலையில் அதாவது திருக்கோணமலை சென். ஜோசப் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து இசையில் ஆர்வம் மிகுதியால் 1968 முதல் பள்ளியில் படித்துக் கொண்டே இலங்கை வானொலிவரை எனக்கு உதவியாக 1983 வரை இசை உதவியாளராக மட்டும் அல்ல ஈழத்து முதல் இசைத்தட்டுத் தயாரிப்பிலும், அத்தனை இசைத்தட்டு வெளியீட்டிலும் முக்கிய ஒரு நண்பனாக செயல்பட்ட, திருகோணமலையில் மன்னணி நகைக்கடை ஒன்றின் உரிமையாளர். 1983இல் நான் ஜேர்மனி சென்றபின், அவர் இசைமுயற்சிகளில் இருந்து ஒதுங்கிவிட்டார். 1995இல் கனடா வந்த அவர் தொடர்ந்தும் என்னுடன் உதவியாக இருந்திருக்கின்றார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பரமேஷ் கோணேஷ் இந்தப் பெயர் எழுபதுகளில் இலங்கையின் இசைத்துறை வட்டாரங்களில் மிகப் பிரபலமானதாகவும் தனித்துவமானதாகவும் திகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. சொந்தப்பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடி வந்த இவர்களிற்கு மாபெரும் வரவேற்பு மக்களிடையே பெருக ஆரம்பித்தது. திருகோணமலையிலேயே ஆரம்பமான இசைக்குழு திருகோணமலை எங்கள் நாடு மீனிசை பாடி வரும் யாழ்பாடி யாழ்ப்பாணம் போன்ற சொந்தப்பாடல்களை பரமேஸ் இயற்றிப் பாட கோணேஸ் அவர்கள் இனிமையாக இசையமைத்து மேடையேற்றி மக்களின் ஆதரவை அமோகமாகப் பெற்றனர்.