இலங்கைத் தமிழிசை தட்டுக்கலை முன்னோடிகள்!

 


எம்.பி.கோணேஸ்

இலங்கைத் தமிழிசை தட்டுக்கலை முன்னோடிகள்!

மெல்லிசை மன்னர்

பரமேஸ் கோணேஸ்

  • ஈழத்தின் முதலாவது தமிழிசைத் தட்டைத் தயாரித்தவர்கள் (1970)

  • முதன் முதலாக நாற்பதிற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை ஒன்றிணைத்து ஈழத் தமிழிசை உலகிலம், சிங்களப் இசை உலகிலும் புதிய ஓர் சாதனையை நிலைநாட்டியவர்கள்.

  • தமது சொந்த லேபல்களிலேயே அதாவது P.மு.ஆ இசைத் தட்டுக்களில் தமிழ்ப்பாடல்களையூம், சிங்களப் பாடல்களையூம் வெளியிட்ட முதலாவது இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள்.

  • தமது தமிழ்ப் பாடல்களின் மெட்டிற்கு சிங்களப் பாடல்களை உருவாக்கி அதில் வெற்றி கண்டு, சிங்கள இசைத் தட்டுத் தயாரிப்பாளர்களையூம் தமிழ்ப் பாடல்களை உருவாக்குவதற்கு முதல் வழிகாட்டிகளாக இருந்தவர்கள்.

  • கவிஞர், இசையமைப்பாளர், பாடகர், இசைத் தட்டுத் தயாரிப்பாளர்கள், இசைத்தட்டு விற்பனையாளர்கள் (பரமேஸ் கோணேஸ் றெக்கோட்ஸ்பார்) விநியோகஸ்தர்கள் அத்தனை திறமைகளையூம் தம்மிற் கொண்டு செயற்படுத்தி வரும் முதலாவது இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள்.

  • ஈழத்தில் முதன் முதலாக மெல்லிசை, பொப் இசை, (இசைத் தென்றல்) மேடை நிகழ்ச்சியினால் பதினாறுக்கும் மேற்பட்ட வாத்தியக் கருவிகளை ஒன்றிணைத்து இயக்கியவர்கள். இதைச் தென்றல் நிகழ்ச்சிக்கு மண்டப வாசலிலேயே அனுமதிச் சீட்டுக்களை விற்பனை செய்து ஒரே இரவில் ஏழு மணிக்கும், பத்து மணிக்கும் இரு நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள். தொடர்ந்து ஆறு தினங்கள் ஒரு மாகாணத்தில் எட்டு இசைத் தென்றல் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியவர்கள். (29.8.74 முதல் 4.9.74 வரை வடமாகாணம்)

  • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் ஈழத்துப் பாடல், ஈழத்துத் தமிழ்ப் பொப் இசைப் பாடல் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் முன்னரே இதைத்தட்டு வடிவில் தமது பாடல்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அன்பளிப்புச் செய்து அவற்றை இந்தியப் பாடல்கள் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளிலேயே ஒலிபரப்பச் செய்த முதலாவது இலங்கைத் தமிழ் கலைஞர்கள்.

  • ஈழத்துத் தமிழ்ப் பொப் இசைப் பாடல்களென்று ஆங்கிலச் சொல்லையூம் (PழுP) சேர்த்து அழைக்கப்பட்ட பாடல்களுக்கு ஈழத்துத் தமிழ் துள்ளு இசைப் பாடல்களென்ற தமிழ்ப் பெயரைச் சூட்டி, பொப் இசைக்கு முதன் முதலாக இப்பெயரை அறிமுகப்படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் துள்ளு இசைப் பாடல்கள் என்பது மிகப் பொருத்தமாகும்). இம்மலர் வெளியீட்டின் பின்னரே பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் பொப் இசைக்குத் துள்ளு இசைப் பாடல்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

  • முதன் முதலாக ஈழத்து நாட்டுச் சிறப்புப் பாடல்களை (யாழ்பாடி, யாழ்ப்பாணம், மீனிசை பாடி வரும், திருக்கோணமலை எங்கள் நாடு) மெல்லிசையிலும், பொப் இசையிலும் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் வண்ணம் உருவாக்கியவர்கள். மனமாளிகை ரோஜா என்ற பாடலில் யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மலைநாடு, இலங்கை வானொலி, ஆலயங்கள் அகியவற்றை இணைத்துக் கவிபுனைந்து அப்பாடல் வெளிவந்த பின்னரே இதே பாணியில் வேறு சில பொப் பாடல்கள் வெளிவந்தன.

  • முதலாவது இலங்கைத் தமிழிசைத் தட்டை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் வானொலி நிலையங்களிலும் மற்றும் சில வெளிநாட்டு வானொலி நிலையங்களிலும், ஒலிபரப்புச் செய்த முதலாவது இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள். இத்தனை உண்மைகளையூம் எடுத்துக் கூறிய நான் தொடர்ந்தும் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் கடிதமூலம் பதிலளித்து அவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்கக் காத்திருக்கின்றேன். அன்றும் இன்றும் என்றும் புகழ் குன்றாது “இசைத்தென்றல்” வீசிவரும் ஈழத்து மெல்லிசை மன்னர் பரமேஸ் கோணேஸ் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

K.T. செல்வகுமார்

நிகழ்ச்சி அறிவிப்பாளர், பரமேஸ் கோணேஸ்
திருக்கோணமலை


Share this on