ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் – பி. விக்னேஸ்வரன்


மெல்லிசைத் தயாரிப்பு பல அம்சங்களை உள்ளடக்கியது. ஏற்ற பாடல்களைத் தெரிவூ செய்தல் வேண்டும். அதை உரிய இசையமைப்பாளரிடம் கையளித்தல் வேண்டும். அப்பொழுது தமிழ் நிலைய வாத்தியக் குழுவில் ஈழத்தின் பிரபல சிங்களத் திரைப்பட இசையமைப்பாளராக விளங்கிய முத்துசாமி அவர்கள் வயலின் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவர் அடிப்படையில் ஒரு சிறந்த கர்நாடக இசை வல்லுனர். இவர்தான் தமிழ் மெல்லிசைப்பாடல்களுக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றார்.

அடுத்துஇ மெல்லிசைப் பாடல்களுக்கு வாசிக்கக் கூடிய வாத்தியக் கலைஞர்கள் தமிழ் வாத்தியக்குழுவில் அத்தகைய கலைஞர்கள் இருக்கவில்லை. தமிழ் வாத்தியக்கலைஞர்களுக்கு மெல்லிசைக்கென இசையமைப்பாளர் போட்டுக் கொடுக்கும் சங்கீதத் குறிப்புகளை (ழெவநள) பார்த்த உடனே வாசிக்கக் கூடிய ஆற்றல் இருக்கவில்லை. அதற்கு அவர்கள் முயற்சி எடுத்ததும் இல்லை. கர்நாடக இசை வல்லுனர்கள் மெல்லிசையில் ஈடுபடுவது கௌரவக் குறைவூ என்ற மனநிலைதான் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். எனவே மெல்லிசைப் பாடல்களுக்கு வாத்தியக் கலைஞர்களாக சிங்கள வாத்தியக் குழுவிலிருந்தே பெற வேண்டி இருந்தது.
மெல்லிசைத் தயாரிப்புக்கு ஏற்ற கலையகம் என்பது அடுத்த முக்கியமான அம்சம். பல கலைஞர்களைக் கொண்ட நிகழ்ச்சி என்பதால்இ பெரிய கலையகமாக இருப்பதோடுஇ பாடல்களை ஒலிப்பதிவூ செய்வதற்கேற்ற தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டவையாகவூம் இருத்தல் வேண்டும். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அப்போது நான்கு பெரிய கலையகங்கள் இருந்தன. அவற்றில் ஆறாம் இலக்கக் கலையகம் பார்வையாளர்களுடன் கூடிய நிகழ்சிகளைத் தயாரிக்கும் கலையகம். முதலாம்இ ஐந்தாம்இ பத்தாம் இலக்கக் கலையகங்கள் சம அளவான அடுத்த பெரிய கலையகங்கள். இவற்றில் முதலாம் இலக்கக் கலையகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் பின்னர் திருத்தியமைக்கப்பட்ட போதுஇ அதன் ஒலித்தெறிப்பைக் கட்டுப்படுத்தும் திறன் (யூஉழரளவiஉ) அவ்வளவூ சிறந்ததாக இருக்கவில்லை. இதில் பெரும்பாலும் தமிழ் கர்நாடக இசை நிகழ்ச்சிகளே தயாரிக்கப்பட்டன. ஐந்தாம்இ பத்தாம் இலக்கக் கலையகங்களே மெல்லிசை தயாரிப்புக்கேற்ற கலையகங்களாக விளங்கின.

அடுத்த முக்கியமான நபர் ஒலிப்பதிவாளர். மெல்லிசை ஒலிப்பதிவூ என்பது மிகவூம் நுட்பமாகவூம்இ ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டிய ஒரு செயற்பாடு. மெல்லிசைப் பாடல் ஒலிப்பதிவின் போது பலவாத்தியக் கருவிகள் பயன்படுத்தப்படும். எந்தெந்த வாத்தியங்கள்இ எந்தெந்த அளவில் ஒலிக்க வேண்டும்இ ஒவ்வொரு வாத்தியங்களும் அவற்றிற்கேற்ற உரிய தொனி ஒலிவாங்கியினூடாக வருகிறதாஇ வாத்தியக் கருவிகளின் இசையில் பாடகரின் குரல் அமுங்கி விடாமல் இருக்கின்றதா என்பன போன்றவற்றௌடுஇ கலையகத்தில் இருந்து வரும் ஒலியின் அளவூ தொழில்நுட்பத் தேவையின் அளவை மீறிஇ ஒலிச்சிதைவூ (னளைவழசவழைn) ஏற்படாது கவனித்துஇ ஒலிப்பதிவூ செய்தல் வேண்டும். இதை பலன்சிங் (டீயடயnஉiபெ) என்று கூறுவார்கள்.

அநேகமாக ஒலிப்பரப்பு உதவியாளராக இருப்பவர்கள் அனைவருமே இத்தகைய ஒலிப்பதிவூகளைச் செய்வதற்கு பயிற்றப்பட்டிருந்தாலும்இ சிலரையே இத்தகைய ஒலிப்பதிவூகளில் பிரத்தியேகமாக ஈடுபடுத்துவார்கள். அந்த வகையில் மெல்லிசை ஆரம்பிக்கப்பட்ட போது தேசிய சேவை நிகழ்ச்சிகளில் ஒலிப்பதிவில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரனும் (பொப்பிசைப் பாடகர்)இ நானும் மெல்லிசை ஒலிப்பதிவூப் பணிகளை மேற்கொண்டோம். பின் நிர்வாக முறை மாறிஇ தேசிய சேவைஇ வர்த்தக சேவை என்ற பிரிவூ முறை இல்லாது போனவூடன்இ டேவிட் ராஜேந்திரன்இ அருணா செல்லத்துரை ஆகியோரும் அதிக ஈடுபாட்டுடன் மெல்லிசை நிகழ்ச்சி ஒலிப்பதிவில் ஈடுபட்டார்கள்.

இறுதியாக மிகவூம் முக்கியமானவர்கள் பாடகர்கள்இ மேற்கூறிய அனைத்தும் இருந்தும் சிறந்த பாடல்கள் இல்லையெனில் மெல்லிசைப் பாடல்களைத் தயாரிக்க முடியாது. மெல்லிசைப் பாடல்கள் தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்ட போது மெல்லிசைக்கெனப் பாடகர்கள் இருக்கவில்லை. கர்நாடகச் சங்கீதக் கலைஞர்களில் இருந்து மெல்லிசை பாடக்கூடியவர்கள் தெரிவூ செய்யப்பட்டு ஒலிப்பதிவூகள் இடம் பெற்றன. இவர்களில் என் நினைவில் நிற்பவர்கள் எம்.ஏ.குலசீலநாதன்இ மீனா மகாதேவன்இ ராதா ஜெயலட்சுமி சகோதரகள் (நடிகர் ராமதாஸின் சகோதரிகள்) ஆகியோர் மெல்லிசைப்பாடல் ஒலிப்பதிவூகள் மாலை நேரங்களில் இடம்பெற்றன.

ஆரம்ப நாட்களில் மீனா மகாதேவன் அவர்கள் சில சிறந்த பாடல்களைப் பாடியிருக்கிறார். இவர் கொழும்பில் உத்தியோக நிமித்தம் வசித்த மலையாள இனத்தவர். பின்னர் கணவர் வேலை மாற்றலாகி இந்தியா திரும்பிவிட இவரும் போய்விட்டார். அவர் பாடிய ஷஷமாணிக்கத் தேரிலே மயில் வந்தது|| என்ற பாடல் நினைவில் நிற்கும் ஒரு பாடல். இப்பாடல் மெல்லிசைப் பாடல்களில் முதலாவது அல்லது இரண்டாவது ஒலிப்பதிவில் ஒலிப்பதிவூ செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இப்பாடலை நான் ஒலிப்பதிவூ செய்திருந்தேன். இப்பாடலைப் பற்றிய பிறிதொரு தகவலைப் பின்பு கூறுவேன்.

இலங்கை வானொலி மெல்லிசைப் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. இப்பாடல்கள் இந்திய சினிமாப் பாடல்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் கவர்ச்சியானவையாக இருக்கவில்லை. அதேவேளை இலகு சங்கீதப் பாடல்கள் போல்இ கர்நாடக இசைத் தன்மை கொண்டவையாகவூம் இருக்கவில்லை. ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் ஓர் இடைப்பட்ட பாணியில் உருவாகின. இவற்றின் ஒலிப்பதிவின் தரமும் இந்திய சினிமாப் பாடல்களுக்கு நிகராக இருக்கவில்லை.

இந்திய சினிமாத்துறை அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து நவீனம் என்று சொல்ல முடியாவிட்டாலும்இ ஓரளவூ தரம்வாய்ந்த ஒலிப்பதிவூ முறைகளைக் கையாளத் தொடங்கியிருந்து. இவை கேட்பவர்களுக்கு அதீக ஒலியின்பம் கொடுக்கக்கூடியனவாக இருந்தன. (உதாரணமாக புதியபறவைஇ சிவந்தமண் போன்ற படப் பால்கள்) அதே நேரத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்தவையோ மிகப் பழைய மார்க்கோணி வர்க்க ஒலிப்பதிவூச் சாதனங்கள். நேரடியான சிங்கிள் ட்ரக் மோணே ஒலிப்பதிவூ முறை கலையகத்தில் ஆக நான்கே நான்கு ஒலிவாங்கிகள் மட்டுமே பயன்படுத்த முடியூம். இதில் ஒரு ஒலிவாங்கியை வயலின்இ ச்செலோஇ கிளாரினட் மற்றும் மெல்லிய ஒலியெழுப்பும் புல்லாங்குழல் ஆகியவற்றிற்கும்இ ஒரு ஒலிவாங்கியை சித்தார்இ பொக்ஸ் கிற்றார்இ டபிள் பேஸ்இ பேஸ் ஃபு@ட் போன்ற தொனி குறைந்த வாத்தியக் கருவிகளுக்கும்இ ஒரு ஒலிவாங்கியை தபேலாஇ டோல்கிஇ மிருதங்கம் போன்ற தாளவாத்தியக் கருவிகளுக்கும்இ ஒரு ஒலிவாங்கியைப் பாடகருக்கும் என்ற அடிப்படையில் பிரித்துத்தான் ஒலிப்பதிவைச் செய்தோம்.

வாத்தியங்களின் தொகை வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு ஒலிவாங்கிகளைச் சரியானபடி பகிர்ந்தளிக்க வேண்டும். முழுவதுமே தொனி குறைந்த கீழைத்தேய வாத்தியங்களென்றால் ஓரளவூ பிரச்சினை இருக்காது. சில சமயங்களில் இவற்றுடன் எலக்ட்றிக் கிற்றார்இ வாயன் கிற்றார்இ ட்றம் செற் போன்ற வாத்தியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டி நேரும்போது மியூ+சிக் பலன்சிங் என்பது மிகவூம் சிக்கலான ஒன்றாக இருந்தது. கலையகத்தில் எக்கோ சேம்பர் முதலிய கருவிகள் இருந்தபோதும் கூட அவை தரமானவையாக இருக்கவில்லை.

இத்தகைய நிலையில் மெல்லிசைப்பாடல்கள் தயாரிப்பு மிக மும்முரமாக இடம்பெற்றது. இதேவேளைஇ ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வெளியேயூம் மெல்லிசைப்பாடல்கள் தயாரிக்கும் தனியார் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அறுபதுகளிலும்இ எழுபதுகளிலும் யாழ்ப்பாணம்இ திருகோணமலை முதலிய இடங்களில் பொது நிகழ்ச்சிகளில் சினிமாப் பாடல்களைப் பாடும் குழுக்கள் பல இருந்தன. யாழ்ப்பாணத்தில் நடக்கும் திருவிழாக்களில் சின்னமேளத்திற்கு அடுத்ததாக இவர்களின் சினிமாப்பாடல் கச்சேரிகளே மக்களை மிகவூம் கவர்ந்தன.
கண்ணன் கோஸ்டிஇ இரட்டையர் கோஸ்டி. இதுபோல பலபல கோஸ்டிகள். திருகோணமலையில் அப்போது பிரபலம் பெற்றிருந்த பரமேஸ்-கோணேஸ் குழுவினர் தமது நிகழ்ச்சிகளில் சினிமாப் பாடல்களோடு தாமே இசையமைத்துத் தயாரித்த பாடல்களையூம் பாடிப் பிரபல்யமடைந்தார்கள். இவர்கள் 1971ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கையில் ஒரு மெல்லிசை இசைத்தட்டை வெளியிட்டார்கள். ஷஷஉனக்குத் தெரியூமா நான் உன்னை நினைப்பது|ஷஇ ஷஷபோகாதே தூரப் போகாதே|ஷஇ ஷஷநீ வாழும் இடம் எங்கே?||இ ஷஷநீ இன்றி நிலவூ|| ஆகிய நான்கு பாடல்கள் அந்த இசைத்தட்டில் இடம்பெற்றிருந்தன. இந்தப் பாடல்கள் அடிக்கடி வர்த்தகசேவையில் ஒலிபரப்பப்பட்டு மக்களிடையே அறிமுகமாகியது.

பின்னர் 1975ஆம் ஆண்டு காலப்பகுதியில் எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள் இசைக் கட்டுப்பாட்டாளராக இருந்தபோதுஇ ஷஷகங்கையாளே|| என்ற பெயரில் ஒரு எல்.பி மெல்லிசைத் தட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டது. இதில் எஸ்.கே.பரராஜசிங்கம்இ எம்.ஏ.குலசீலநாதன்இ சக்திதேவன்இ குருநாதபிள்ளைஇ எஸ்.பத்மலிங்கம்இ முத்தழகுஇ கலாவதி சின்னச்சாமிஇ முல்லைச் சகோதரிகள் ஆகிய கலைஞர்களின் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மெல்லிசைத் தயாரிப்பை மேலும் தீவிரமாக்குவதற்கெனஇ அந்தக் காலப்பகுதியில் கல்விச்சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த திருமதி. பொன்மணி குலசிங்கம் மெல்லிசைத் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் நடாத்திய மெல்லிசைப் பாடகர் தெரிவில் பல சிறந்த பாடகர்கள் தெரிவூ செய்யப்பட்டார்கள். முல்லைத்தீவிலிருந்து வந்த சிறுமிகளான முல்லைச் சகோதரிகள் அதுவரை சிறுவர் நிகழ்ச்சிகளில் பாடிக் கொண்டிருந்த கலாவதி சின்னச்சாமிஇ முத்தழகு போன்றௌர் குறிப்பிடக் கூடியவர்கள். திருமதி.குலசிங்கம் சிறிது காலம் மெல்லிசைத் தயாரிப்பாளராக இருந்த பின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மொழிவாரிச் சேவையாகப் பிரிக்கப்பட்டபோதுஇ தமிழ்ச்சேவையின் இசைப்பகுதிக் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். இவர் இசைக் கட்டுப்பாட்டாளராகப் பதவியேற்றதும்இ இசைப்பிரிவூ உத்வேகம் பெற்றது. இதுவரைகாலமும் கர்நாடக மற்றும் மெல்லிசைப் பாடகராக பிரபல்யமடைந்திருந்த திரு.எம்.ஏ.குலசீலநாதன் மெல்லிசைப்பாடல்களைத் தயாரிப்பதற்கென நியமிக்கப்பட்டார்.

இதுவரை மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு சிங்கள வாத்தியக் கோ~;டியைச் சேர்ந்த கலைஞர்களே பயன்படுத்தப்பட்டார்கள். அவர்கள் தமிழ்ப் பாடல் ஒலிப்பதிவூகளின் போது வழங்கிய ஒத்துழைப்பு திருப்திகரமானதாக இருக்கவில்லை. இதைத் தயாரிப்பாளராக இருந்து உணர்ந்திருந்த திருமதி.குலசிங்கம் அவர்கள் கட்டுப்பாட்டாளராக வந்ததும் தமிழ்ச்சேவைக்கென மெல்லிசை வாத்தியக்கோ~;டியை உருவாக்கினார். இதில் பல இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இசையமைப்பாளர் முத்துசாமி அவர்களின் மகன் மோகன் கீபோர்ட்இ பியானோஇ ரங்கன் பிரமநாயகம் ஆகியோர் தாளவாத்தியங்கள்இ ரவீந்திரன் வயலின் (இவர் இப்போது மொன்றியலில் இருக்கிறார்). இவரின் சகோதரர் ராஜ்குமார் மிருதங்கம்இ கர்நாடக இசை வாத்தியக்குழுவில் கடம் வித்துவானாக இருந்த கே.கே.அச்சுதன் அவர்களின் மகன் ரவீந்திரன் மிருதங்கம்இ ரம்ஜான் என்னும் மலே முஸ்லீம் இனத்தவர் வயலின்இ முத்துசாமியின் மைத்துனரான சுனில் பிளாரினட்இ சித்தார் போன்ற வாத்தியக் கருவிகள்இ இராசையா அவர்கள் தபேலா இப்படி வாத்தியக் கலைஞர்கள் தெரிவூ செய்யப்பட்டு தமிழ் மெல்லிசை வாத்தியக்கோ~;டி உருவாக்கப்பட்டது.

இதேவேளை கர்நாடக வாத்தியக் குழுவில் இருந்த ரி.வி.பிச்சையப்பா அவர்கள்இ அவரது சகோதரர் ரி.வி.விநாயகமூர்த்தி ஆகிய வயலின் கலைஞர்களும்இ புல்லாங்குழல் கலைஞர் கமலா சதாசிவம்இ வீணைக் கலைஞர் திருமதி லீலாவதி இரத்தினசிங்கம் ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களுக்கு வாசிக்கத் தொடங்கியிருந்தார்கள். இவர்களையூம் விட மேலதிகமாக வாத்தியக் கலைஞர்கள் தேவைப்படும் போது சிங்கள வாத்தியக் குழுவிலிருந்து கலைஞர்கள் அழைக்கப்பட்டார்கள். அத்தோடு முத்தழகு போன்ற பாடகர்கள் தமது பாடல் ஒலிப்பதிவூகள் சிறப்பாக அமைய வேண்டுமென்பதற்காக ஒலிப்பதிவின் போது மேலதிக சிங்கள வாத்தியக் கலைஞர்களைத் தமது சொந்தச் செலவில் அமர்த்த அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். முத்தழகு சிங்களச் சேiயிலும் பாடகராக இருந்தமையால் இத்தகைய ஒத்துழைப்பைப் பெறக் கூடியதாக இருந்தது.

Share this on