புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ்ப் பாடசாலை


மொழியூடன் வளர்ச்சியூம் அதன் கலைஇ பண்பாட்டு விழுமியங்களும் அதைப் பேசும் இனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை பறை சாற்ற வல்லன. ஒரு இனத்தின் பண்பாட்டு வரட்சிக்கு வளர்ச்சியடையாத அதன் மொழியூம்இ கலையூமே காரணமென மானிடவியலாளர் கூறுவர். வளர்ச்சி பெற்ற பெறுகின்ற எந்த இனமும் மொழிவளமும் கலை வளமும் கொண்டதாகவே மிளிரும். அதற்கேற்ப அன்று ஜேர்மனியில் மொழிவளத்திற்காகவூம் கலை வளத்திற்காகவூம் ஆரம்பிக்கப்பட்ட அரங்கேற்றம் என்ற பாடசாலையைப் பற்றியூம் அதன் சேவை பற்றியூம் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

மேற்கு ஜேர்மனியில் பத்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் தழிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கலையை கற்பிக்க முடியவில்லையே என்று ஏங்கித்தவித்துக் கொண்டிருந்த வேளையில் எங்கள் மக்களுக்காக ஒரு தமிழ்ப்பாடசாலையை உருவாக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் பலரை நாடி உதவி கேட்ட பொழுது ஒருதரும் பொறுப்பேற்க வராத இடத்தில் தானே முன்னின்று துணிந்து ஷஷஅரங்கேற்றம்|| என்ற பாடசாலையை 23.3.1986ஆம் ஆண்டு எந்த உதவியூம் இல்லாது ஒரு தனிநபரால் அவரின் மொழியினதும் கலையினதும் ஆர்வத்தினால் தமிழ் சிறார்கள் தமிழையூம் தமிழ்க் கலையையூம் கற்க வேண்டும் என்ற நோக்குடன் எந்த ஒரு தமிழ் கற்கும் பாடசாலைகள் இல்லாத நேரத்தில் தமிழ் மக்களுக்காக மேற்கு ஜேர்மனியில் முதன் முதலில் தமிழ்ப் பாடசாலை அமைத்தவர் தான் திரு. எம். பி. கோணேஸ் அவர்கள். அவரும் அவரின் குடும்பத்தினரும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதன் வளர்ச்சி கண்டு பின்பு அங்கே வாழும் தமிழ் மக்களும் ஜேர்மன் மக்களும் ஆதரவூ நல்க அந்தப் பாடசாலை வெற்றி நடை போட்டது ஒரு வரலாறு தான்.

நூறுக்கும் மேற்பட்ட சிறார்கள்இ தமிழ்மொழிஇ நடனம்இ சங்கீதம்இ மிருதங்கம்இ வீணைஇ கீபோட் எனப் பல கலைகளையம் ஒரே இடத்தில் கற்றார்கள். சிறார்கள் மட்டுல்ல பெரியவர்கள் கூடப் பலர் எலக்டோனிக் கீபோட் கற்றார்கள். நொய்ஸ் – முன்சன்கிளட்பாக் யூ+க்சன்இ கிறவன்புறௌச் மற்றும் சுற்றாடலில் வாழும் தமிழ் மக்களின் நலன் கருதி கொர்ச்சன்புறௌச்சில் அமைக்கப்பட்டதே இந்த அரங்கேற்றப் பாடசாலையாகும்;. இந்தப் பாடசாலைக்கு அங்கே அமைந்திருந்த கத்தோலிக்க ஆலயத்தின் திரு. கிறாப்போல் அவர்களும் கறிற்றாஸ் செல்வி ஸாப் அவர்களும் மிகவூம் உதவி புரிந்ததை மறக்க முடியாது.

அரங்கேற்றப் பாடசாலையில் தமிழ் கற்பித்த பல ஆசிரியர்களுள் திருமதி. முத்துக்குமார் அவர்களின் சேவை அளப்பரியது. பரமேஸ்இ கோணேஸ் எனப் பரலாலும் புகழப்பட்டவர்கள் மெல்லிசையில் புகழ் சேர்த்தவர்கள் அவர்களில் திரு. கோணேஸ் அவர்கள் எலக்ரிக் கீபோட் இசையைக் கற்பித்தார். தங்கள் சிறுவயது ஆசையை நிறைவேற்ற பல பெரியவர்கள் கூட கீபோர்ட் இசையைக் கற்றார்கள். பரதநாட்டியம் கற்பித்தவர் திருமதி. கிருபாநிதி இரத்தினேஸ்வரன் அவர்கள். கர்நாடக சங்கீதம் வீணை கற்பித்தவர் திரு. செல்வசீராளன் அவர்கள். மிருதங்கம் திரு. முருகதாசன் அவர்கள். இந்த ஆசிரியர்கள் எல்லோரும் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பல சிரமங்களின் மத்தியிலும் இந்தச் சேவையினைப் புரிவதற்கு மனமுவந்து வந்தவர்கள். இவர்கள் யாவரும் மிகவூம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பாடசாலையின் ஆண்டுவிழா பெரும் அமர்க்களமாக நடைபெற்றது. இன்றும் மறக்க முடியாது. இன்றுபோல் அன்று இல்லை – எந்த ஒரு கலைப் பொருட்களும் இலகுவாக எடுக்க முடியாத அந்த நேரத்திலும் ஒவ்வொரு ஆசிரிiயினதும் விடாமுயற்சியினாலும் நல்ல ஆக்கங்களினாலும் மிகவூம் சிறப்பான படைப்புகள் அங்கே அரங்கேற்றப்பட்டன. திரு. சுதன் அவர்கள் மேடைக்கென அலங்காரமாக உருவாக்கிய நடேசர் சிலை மிகவூம் அழகாகவூம் அற்புதமாகவூம் இருந்தது. நாதஸ்வரம் அளவெட்டி திரு. எம்.கே. பாலமுரளிஇ தவில் நெல்லியடி கே.பி. செல்வநாயகம்
அவர்கள்இ வயலின் திருமதி. ரஞ்சிதமலர் பரமானந்தன் அவர்கள்இ மொழிபெயர்ப்பாளர் திரு. எட்மன்ட் என எல்லோரும் தங்கள் திறமையினை அனைத்துக் கலைஞர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக சிறந்த நிகழ்ச்சிகளை அளித்தார்கள். எல்லோரும் அடைந்த மகிழ்ச்சி அளவிடமுடியாதது. ஏன் அங்கே இப்போது போன்று வாரம் ஒரு மேடைநிகழ்ச்சி இருக்கவில்லை. அனைத்துத் தமிழ் மக்களும் திரண்டு வந்திருந்து ரசித்தார்கள். தன்தன் நிகழ்ச்சி முடிய எழும்பிப் போகாமல் முடியூம் வரை இருந்து நன்றாக நடந்ததை ஆனந்தத்துடன் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து எல்லாவற்றையம் திரும்பவூம் ஒழுங்குபடுத்தி ஒரு குடும்பமாக இருந்தது இப்போதும் நினைக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது. இவை எல்லாவற்றிற்கும் பக்கபலமாக இருந்து எல்லோருக்கும் உணவூ அளித்து நாள் முழுக்க பயிற்சிகளுக்கு உதவி செய்து ஆசிரியைகளின் போக்குவரத்திற்கும் ஒழுங்கமைத்து உறுதுணையாக நின்றவர் அண்ணன் திரு. கோணேஸ் அவர்களும்இ பத்மனி அவர்களும்இ அவர்களின் பிள்ளைகளும் என்பது மறக்க முடியாது.

இப்படி நான் இதை முழுத்தரவூகளுடன் எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் மாணவி ரம்மியா சிவா அவர்கள். அவருக்கு என் நன்றிகள். அன்று நடந்த விழாவின் மலர் விழாவின் வீடீயோ என இன்றும் அவர் அதைப் பத்திரமாக வைத்திருந்து பகிர்ந்து கொள்கிறார் என்றால் சிறிது யோசியூங்கள். எவ்வளவூ தூரம் அரங்கேற்றம் பாடசாலை எல்லோரையூம் உருவாக்கியூள்ளது. அதற்காக திரு. எம்.பி. கோணேஸ் அவர்களும் திருமதி. பத்மினி கோணேஸ் அவர்களும் அரும்பாடு பட்டது மறக்கப்படவில்லை. அவர்களின் சேவை இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது திண்ணமாகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர்கள் சேவை வானொலி வண்ணமாக கனடாவிலும் தமிழ் மொழி மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பது பாராட்டப்படக் கூடியது.

Share this on