மெல்லிசைப் பேரரசன் கோணேசின் வெற்றியில் சீதையும் லச்சுமணனும்


மென்மையான சுபாவம், இடைவிடாத நாடித் துடிப்புகள் மிக்கவர். இசைத்துறையில் தன்வாழ்வை மூன்று கண்டங்களில், அரை நூற்றாண்டிற்கு மேலாக சாதனை படைத்த மெல்லிசை பேரரசன். வெற்றிப்படிகளின் ஒவ்வொன்றிலும் சீமெந்தாக மேலே பொறிக்கப்பட்ட அழகான மாபிள் கற்களாக அவர் மகன் பிரதீப் அவர்களும், துணைவியார் பத்மினியும் இணைந்துள்ளார்கள்.

முதலில் தந்தைவழி தன்வாழ்வினை இணைத்துக் கொண்டு பணிகள் ஆற்றி கை கொடுத்து உதவியவர் பிரதீப் அவர்கள். அவரது தொழில் நுட்ப நவீன மயமாக்கலின் ஐ.ரீ.ஆர். வானொலி தொலைக்காட்சிகளில் சுமார் கால் நூற்றாண்டிற்கு முன்பு புலம் பெயர் நாடுகளில் குறிப்பாக வட அமெரிக்காவில் தாயகத்திற்கும் – புகுந்தகத்திற்கும் நவீன பண்பாட்டுகும், நாகரிக விழுமியங்களுக்கும், பண்டையஇ பழுத்த எம் பண்பாட்டிற்கும், புலம் பெயர் முதலாவது சந்ததிக்கும், இம்மண்ணில் கருவாகி, உருவாகி வளரும் இரு சந்ததிகளுக்குமிடையே பாலமாக அமைந்தது கோணேஸ் அவர்களுக்கு மட்டுமல்ல, எம் சமூகத்தின் பல படிகளில் வசிப்பவர்கள் மத்தியில் பெரும்பணியாக விளங்க, பிரதீப் அவர்கள் துடிப்பான, துல்லியமான, நவீனமான செயல்பாடுகள் திரைமறைவில் இயங்கி வந்தமை இராமனுக்கு லச்சுமணன் போல் பிரகாசித்தது. அத்தோடு அரச அனுமதி பெற ஆற்றிய பல பணிகள் காலமறிந்து செயற்பட்டவை. சிறந்த துணைவியாய் இல்லறத்தின் முட்களைக் களைந்து மலர்களை மலரவிட்டு அதனைக் காயாய், கனியாய் பருவமாற்றம் பெற்றுச் சுவைக்க வைத்த பெருமைக்குரியவர் பத்மினி அவர்கள்.

பத்மினி அவர்கள் கலைஞர்களை வரவேற்று, சீறாமல், சினக்காமல் சீர்வரிசை வழங்கியவர். கோணேஸ் அவர்கள் கலைத்தோட்டதில் பல கலையூலகில் ஷஅ| ஷஆ| கூடத் தெரியாதவர்கள், ஞான கலைத்திறன் அனுபவம் மிக்கவர்கள் என பல தரப்பட்டவர்களை இன்று பல ஊடகங்களில் வளர்ந்தஇ மதிக்கத்தக்க கலைஞர்களாகும் நிலைக்கு அளித்த பங்களிப்பு பிரமாண்டமானவை.

பத்மினி தன் எல்லைக்குள் இருந்து பல நிகழ்ச்சிகளைக் குறிப்பாக மாறிவரும் சமூகநிலைப்பாடுகள், கரையூம் பழைமை, விசுபரூபமெடுக்கும் நவீன நாகரிகம், பெண் உரிமை, முதியோ; தனிமையின் கொடுமை, ஒழுக்க வரம்பைக் காத்தல், சமய உணர்விற்கு உரமூட்டல்இ தமிழ் மக்கள் எழுச்சி, மொழி – இனப்பற்று எனத் தொடாத கற்கள் இல்லை.

இத்தகைய இரு சந்ததிகளின் அளப்பரிய பணிகள்தான்இ மெல்லிசைப் பேரரசன் அவர்கள் கொடிகட்டி தரணியெங்கும் தலை நிமிர்ந்து தன்னிகரற்ற தனிப் பெரும் மெல்லிசை பேராசானகத் திகழ காரணமாக உள்ளனர்.

அவர்கள் இருவரும் கோணேஸ் அவர்களின் இசைத்துறையில் இரு கரங்களாகச் செயற்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


சாமி அப்பாத்துரைShare this on